அணித் தலை­வ­ராக தொடர்ந்தும் அஞ்­சலோ மெத்­தியூஸ்; இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளுக்கு மலிங்க !

RESTRICTED TO EDITORIAL -- USE NO ADVERTISING -- USE NO PROMOTIONAL -- USE NO MERCHANDISING -- USE Sri Lankan bastmen Lasith Malinga (L) and Angelo Mathews (R) celebrate after their partnership took them to victory over Australia in the opening one day cricket match at the MCG in Melbourne on November 3, 2010. Sri Lanka defeated Australia by one wicket in the opening one-day international at the Melbourne Cricket Ground.     RESTRICTED TO EDITORIAL -- USE NO ADVERTISING -- USE NO PROMOTIONAL -- USE NO MERCHANDISING -- USE  AFP PHOTO/William WEST

இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்­கெட்டின் அணித் தலை­வ­ராக சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் தொட ர்ந்து செயற்­ப­டுவார் என்று இலங்கைக் கிரிக்­கெட்டின் தேர்­வுக்­குழு அறி­வித்­துள்­ளது. அதேபோல் இலங்கை இரு­ப­துக்கு 20 அணியின் தலை­வ­ராக நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
எதிர்­வரும் ஜூன் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள பாகிஸ் தான் தொட­ரி­லி­ருந்து அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள இங்­கி­லாந்து தொடர்­வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலை­வ­ராக அஞ்­சலோ மெத்­தியூஸ் செயற்­ப­டுவார். அதே போல் 2016 ஆம் ஆண்டு இந்­தி­யாவில் நடை­பெ­றவுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணம் வரை லசித் மலிங்க இரு­பதுக்கு 20 அணிக்கு தலைமை தாங்­குவார் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தேஷில் இறு­தியாக நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தை லசித் மலிங்க தலை­மை­யி­லான அணி வெற்­றி­கொண்ட பெரு­மை­யோடு 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திலும் லசித் மலிங்க தலைமையிலான அணி களமிறங்கவுள்ளது.