இலங்கை அணி 281, அவுஸ்திரேலியா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டினை இழந்துள்ளது

 

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளை இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 86 ஒட்டங்களயும் அணித்தலைவர் மெத்தியுஸ் 54 ஒட்டங்களையும் பெற்றதுடன், குசல் பெரேரா 49 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

தற்போது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 54 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டினை இழந்துள்ளது.

குறித்த விக்கட்டினை தனது முதலாவது போட்டியில் விளையாடும் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் டில்ருவன் பெரேரா ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.

ஆஸி அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய  டேவிட் வார்னர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் .