பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே உள்ளன: மு.க.ஸ்டாலின்

201607211436550466_Stalin-opinion-on-tamil-nadu-budget_SECVPF

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். இதையடுத்து இன்றைய கூட்டம் நிறைவு பெற்றது. 

அதன்பின்னர் வெளியே வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே இடம்பெற்றுள்ளன. முக்கிய அம்சங்கள எதுவும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. நதிகள் இணைப்பு, மோனோ ரெயில் திட்டம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் தமிழகத்தின் கடனை எப்படி அடைக்கப்போகிறார்கள் என்பது பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறினார்.

முக்கியமான துறைகளுக்கு பட்ஜெட்டில் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், நிதிப்பற்றாக்குறை அதிகமாகக் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையால் எந்த பயனும் இல்லை எனவும் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏழை, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றும் விதமாக இந்த பட்ஜெட் உள்ளது என்றும்,  மாணவர்களின் கல்விக்கடன் பற்றிய அறிவிப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.