யாரை வேட்டையாடினாலும் பயணத்தை நிறுத்த போவதில்லை :மகிந்த

சந்தேக நபர்களை குற்றவாளிகளாக்கும் காலமிது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

mahinda

 

உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களின் ஒன்றியம் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

யாரை வேட்டையாடினாலும் எவரைக் கைது செய்தாலும் பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் பயணம் முன்னோக்கி செல்லுமே அன்றி பின்நோக்கி நகர்த்தப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். 

எதிர்வரும் 28ம் திகதி கண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நடைப்பயணம், கொழும்பு நோக்கி வரும்.அரசாங்கத்தை கவிழ்ப்பது பெரிய விடயம் அல்ல எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.