முன் கை நீண்டால் முழங்கை நீளும் – சபூர் ஆதம்

வடக்கு-கிழக்கு இணைப்பைக் கோரும் சம்பந்தன் ஐயாவுக்கு- கிழக்கு பாமரனின் கடிதம்!                                                                                     

வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நீங்கள் கூறியதாக பத்திரிகையில் படிக்க முடிந்தது. 

ஐயா! 

 இலங்கை அரசியல் எனும் போது அதில் முஸ்லிம்களின் பங்கு மிகையானது. பிரித்தானிய காலனித்திலிருந்து விடுபட்ட இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும், வெளியுறவு கொள்கையினை சுமந்து சென்று வெளியுறவு அமைச்சுக்களை அலங்கரிந்த முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் நாபகப்படுத்தப்பட வேண்டியர்களே. இன்றுவரை அரேபிய உறவுகளை ஏற்படுத்தி அதனூடாக இலங்கைக்கு பல வகையிலும் நன்மை பயக்கச் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். அத்துடன் தமிழ் முஸ்லிம் உறவுகளை ஏற்படுத்த பாடுபட்ட முஸ்லிம் பெரியவர்கள் பலரின் பங்கு, வரலாற்றுச் சான்றுகள் தழிழ் சமூகத்திடம் தொடர்ச்சியாக மறைத்து, மறக்கடிக்கப்பட்டே வந்துள்ளது.

இன்றுள்ள அரசியலில் பேதங்கள் அதிகரித்து முஸ்லிம் அரசியல் மட்டுமல்ல முழுச்சமூகமுமே சந்தேகத்தோடு சக சகோதர்களைப் பார்க்கின்ற நிலைமை எற்படுத்தியவர்கள் இன்றுள்ள தழிழ்த்தலைமைகள், புலிகளின் பலாத்காரத்தினால் மட்டுமல்ல தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டினாலும்தான். மிதவாதத் தமிழ்த்தலைமை அழிக்கப்பட்ட பின்னர், புலிகளின் கைப்பாவையாகி இருந்த இந்தத் தமிழ் அரசியல் தலைமை முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கக்கூட உரிமையற்று வக்கற்ற அடிமைகளாக இருந்தவர்கதான் இன்று வடகிழக்கை இணைக்கக் கோறுகின்றனர்..

அம்பாறை போன்ற பிரதேசங்கள், பாரம்பரிய தமிழர் தாயகம் என்று கூறிவந்த இந்தத் தமிழ்த்தலைமையினர் தெளிவான அரசியல் தீர்வொன்றை முஸ்லிம் சமூகத்தினருக்கு எடுத்தியம்பத் தவறிவிட்டனர்.

புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னரேயே அரசியல் ரீதியான தாக்கம் ஒன்றைத் தமிழ்ச்சமூகம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் தமிழர்களுக்குரிய தீர்வே முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்ற தொனியில் தொடர்ந்து பேசிய வந்த இந்தத் தமிழ்த்தலைமை முஸ்லிம் சமூகம், அவர்களின் அடையாளம் என்பன தனித்துவமானது என்பதை ஏற்க மறுத்தும் வந்துள்ளது. 
முஸ்லிம்களின் தனித்துவம் பற்றி இதுவரை அரசு நிலைப்பாடு எதுவும் எடுக்காதது ஒருபுறமிருக்க, அவர்களை மீளக் குடியமர்த்துவதற்குரிய சூழலை அரசியல் ரீதியாக ஏற்படுத்த தமிழர் தலைமை இதுவரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை. அத்துடன் முஸ்லிம்கள் எடுத்த பல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளனர்.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறிய போதெல்லாம் முஸ்லிம்கள் அற்ற தமிழீழம்தான் என்று மறைமுகமாகக் கூறப்பட்டதை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம், மறக்கவும் கூடாது.

இராணுவம் யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் இருந்த நிலைகளுக்குத் திரும்பவேண்டும் என்று கோரிய தமிழ் அரசியல் தலைமை, ஏன் புலிகளிடம் முஸ்லிம்கள் முன்னர் இருந்த இடங்களுக்குத் திரும்ப எந்தப் பேச்சுவார்த்தையுமே தொடங்கக் கூட தயக்கம் காட்டினர்!?

முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த இடங்கள் என்றுமே மீளக்குடியமரக்கூடியதாக இருந்ததும், இடம்பெயர்ந்த மக்கள் குறிப்பாக புத்தளம் பகுதிகளில் குடியேறிய முஸ்லிம்கள் எப்போதாவது மீளச்செல்வோமா என்ற கனவுடனும் ஏக்கத்தோடுமே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இறுதியில் அவர்கள் சென்ற போது என்ன நடந்தன என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

நடந்தவற்றிற்கு மன்னிப்பு மட்டுமல்ல அவர்களிடமிருந்து சூறையாடப்பட்ட சொத்துக்கள் மீளக் கையளிக்கப்பட எதுவித நடடிக்கையும் எடுக்காததோடு, அவர்கள் சுயாதீனமாக இயங்க முழுமையான அடக்குமுறையற்ற மனப்பான்மை தமிழர்களிடம் மீண்டும் ஏற்படுத்த இந்தத் தமிழ் தலைமைகள் முயற்சிக்க வில்லை மறாக ரங்கா போன்ற சூழ்ச்சிக் காரர்களைக் கூட இவர்கள் கண்டிக்க வில்லை என்பதும் கசப்பான உண்மை.

எவ்வாறு தமிழர்கள் தமது அரசியல் தீர்வை முடிவு செய்ய விரும்புகின்றார்களோ அவ்வாறே முஸ்லிம்களும் தமது அரசியல் தீர்வை முடிவு செய்ய வேண்டும் அதைவிடுத்து, அரசியல் நெளிவு சுழிவுகளில் சாதாரண மக்களை மூட்டிவிட்டு அதில் குளிர் காய்வதை அரசியல் தலைமைகள் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்!

தற்போது சிங்களவர்கள் அவர்கள் செய்த பிழைகளை எண்ணிப்பார்க்கத் துவங்கி விட்டனர், ஆனால் இன்னும் தமிழ் பேசிக்கொண்டு இருக்கும் நாம் எமது பிரச்சினைகளை எமக்குள் தீர்த்துக் கொள்ள பொறிமுறை ஒன்றை அடயாளப்படுத்த முடியாதபோது எப்படி தீர்வு வரும்.!? 
 முன் கை நீண்டால் முழங்கை நீளும்!!

சபூர் ஆதம் saboor atham