பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இறுதி தடவையாக அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமராக இன்றைய தினம் பங்கேற்க உள்ளார்.
நாளைய தினம் பிரதமர் கமரூன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்தனர்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என பிரதமர் கமரூன் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் தமது நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் பதவியை ராஜினாமா செய்வதாக கமருன் அறிவித்திருந்தார்.
இதன்படி, நாளைய தினம் டேவிட் கமரூன் உத்தியோகபூர்வ இல்லமான டௌனிங் ஸ்ட்ரீட் இல்லத்திலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பிரித்தானிய மஹாராணியிடம் கமருன் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்க உள்ளார்.
2010ம் ஆண்டு முதல் உள்விவகாரச் செயலாளராக கடமையாற்றி வந்த திரேசா மே அடுத்த பிரதமராக நியமிக்கப்பட உள்ளார்.
பொதுத் தேர்தல் இன்றி திரேசா மே பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.