மு.காங்கிரஸை நட்பிட்டிமுனை மக்கள் நிராகரிக்க நியாயம் உள்ளது , நிராகரிக்கவும் வேண்டும்

13653114_1126785860693160_2360784166137573844_o_Fotor

யு.எம்.இஸ்ஹாக் 

 

நான்காவது தடவையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தால் உடைக்கப் பட்டு நெகோட் திட்டத்தில் நிர்மாணிக்கப் பட்ட நட்பிட்டிமுனை சந்தைக்கட்டிடம் 6 வருடம் கழிந்தும் அநாதரவாக பாழடைகிறது .

இத்தோடு கட்டிய கல்முனைக் குடி , மருதமுனை சந்தைகள் பள்ளிவாசல்களுக்கு ஒப்படைக்கப் பட்டு சிறப்பாக இயங்குகிறது

கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் முதல்வர்களும் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் நட்பிட்டிமுனையை புறக்கணித்தே வந்துள்ளனர் . அந்தப் புறக்கணிப்புக்கு இந்த சந்தை கட்டிடம் போதுமான சான்றாகும் .

13590340_1126785887359824_8796348766834970158_n_Fotor

இந்த சந்தைக் கட்டிடம் ஆறு வருட காலமாக பாழடைவதற்கு காரணமானவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் , கட்டிடத்தை அமைக்க ஒப்பந்தம் செய்த முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி அமைச்சருமான எச் .எம்.எம்.ஹரீஸ் , இதற்க்கெல்லாம் காரணமாக இருந்த முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் தற்போதைய அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளருமான யூ.எல்.எம்.தௌபீக் ஆகியோருடன் அதன் பின்னர் வந்த முதல்வர்களும் ஆளும்தரப்பு உறுப்பினர்களுமே .

இந்த சந்தைக்ககட்டிடத்தை இந்த 6 வருடம் கழிந்த போதிலும் பாழடைய வைத்தவர்கள் என்ன நியாயம் கூறப் போகிறார்கள்.

harees slmc thowfeek