ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் அந்த முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது போல் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜாதிக ஹெல உறுமயவும் இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடபடவுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.