தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ரோட்ரிகோ டுட்டெர்டே பெரும்பான்மை சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிராக ரோட்ரிகோ டுட்டெர்டே இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் 16-வது அதிபராவார்.
அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் துணை நீதிபதி முன்னிலையில், மலகனங் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பதவியேற்ற போது அவரது மகள் வெரோனிகா பைபிள் வைத்திருந்தார். பைபிள் மீது ஆணையிட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார்.