மஹிந்தவின் கோரிக்கைக்கு அமைய எதிர்ப்புப் பேரணியில் மாற்றம் !

 

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான நடை பயணம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய மாற்றப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 
Dullas-Alahapperuma_51
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் உயர்தரப் பரீட்சை, கண்டி எசல பெரேரா போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இதனை மேற்கொள்ளுமாறு, நேற்று இரவு மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளதாக டலஸ் அலகப்பெரும குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி எதிர்வரும் ஜூலை 28ம் திகதி இந்த எதிர்ப்பு நடவடிக்கையை கண்டியில் இருந்து ஆரம்பித்து ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.