அமைச்சர்கள் அனைவரும் முன்னுதாரணமாக திகழவேண்டும் : ரஞ்சன் ராமநாயக்க

அமைச்சர்கள் மக்களிடம் வயிற்றில் ஈர துணியை கட்டிக்கொள்ளுமாறு கூறினாலும் அதற்கு முன்னர் அமைச்சர்கள் அனைவரும் முன்னுதாரணமாக திகழவேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

rDI5KjY

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நாட்டில் சகல பிரஜைகளும் தலா 26 ஆயிரம் ரூபா கடனாளியாகியுள்ளனர். 

இதனால், 10 வருடங்களாவது அனைவரும் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும்.புதிய வாகனத்தை பெற்றுக்கொள்ள இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்தர்ப்பம் கிடைத்தது. 

புதிய வாகனம் தேவையில்லை எனக் கூறி, நான் இரண்டு பழைய வாகனங்களை பெற்றுக்கொண்டேன்.மக்கள் மீது அன்பு இருந்தால், மதத் தலைவர்கள் கூட சில அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். 

ஜனாதிபதி நிதியம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ராஜபக்ச வரி என்று மக்களிடம் வரியை அறவிடுவது தவறு. ராஜபக்சவினர் கொள்ளையிட்டிருந்தால், அவற்றை ராஜபக்சவினரிடமே அறவிட வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்