தீயினால் அழிவடைந்த சாலாவ இராணுவ முகாம் மீண்டும் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இராணுவ களஞ்சியசாலையை மீண்டும் சாலாவ இராணுவ முகாமில் அமைக்க முடியாது எனவும் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெடிப்பு இடம்பெற்ற பகுதிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இராணுவ முகாமிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்கான பகுதி பாதுகாப்பு வலயமாகவே தொடர்ந்தும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னர் காணப்பட்டதை காட்டிலும் முகாமை நேர்த்தியாக வடிவமைக்கவே திட்டமிடப்பட்டுள்ளது எனவும், குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தினர் வௌியேற மாட்டார்கள் எனவும் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான குறைப்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.