சுதந்திரக் கட்சியை விடவும் கிருலப்பணையில் அதிகளவான மக்கள் திரண்டிருந்தனர் – விமல்

wimal mahintha rajapase

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விடவும் கிருலப்பணையில் அதிகளவான மக்கள் திரண்டிருந்தனர் என ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை தாம் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிருலப்பணைக்கு வந்தவர்கள் சொந்த செலவில் வந்தார்கள் எனவும், காலிக்கு சென்றவர்களுக்கு போக்குவரத்து இலவசமாக வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் மக்கள் ஆதரவினை தோற்கடிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்ட அரசாங்கம் அவரது பாதுகாப்பை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக கடமையாற்றினார் எனவும் அவருக்கு அந்த சந்தர்ப்பத்தில் போதிளவு பாதுகாப்பினை மஹிந்த வழங்கியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய புலிகள் திட்டமிட்டிருந்தனர் எனவும், மஹிந்த வழங்கிய பாதகாப்பு காரணமாக புலிகளினால் தாக்குதலை திட்டமிட்டவாறு நடத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.