அதாஉல்லா யாருடைய கைக்கூலியுமல்ல….!

athaullah

சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் நாளை காலை காலியில் இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு பிரத்தியேகமாக அழைப்புவிடுக்கப்பட்டு கட்சியின் செயலாளர்கள் முக்கியஸ்தர்களை கட்சியின் தலைவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன சந்தித்திருந்தார். இதனடிப்படையில் ஒருசில முடிவுகள் எட்டப்பட்டு பங்காளிக்கட்சிளுக்கு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் மஹிந்தவின் பொது எதிரணிக்கு ஆதரவாக இருந்த தொழிலாளரை் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருகிற காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான கூட்டமைப்புடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்காள்ள முடிவாகியது.
தேசிய காங்கிரஸ் கட்சியானது கடந்த காலங்களில் மஹிந்தவின் கைக்கூலி என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் அது அப்படியல்ல கூட்டமைப்புக்கு தலைவர்களாக இருந்த ஜனாதிபதிகளுடன் சுமுகமான உறவை பேணிவந்தது தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச இன்றிருக்கும் மைத்தரிபால சிறீசேன தலைவர்கள் மாறிமாறியிருக்கிறார்களே தவிர கூட்டமைப்பிலிருந்து தேசிய காங்கிரஸ் மாறவில்லை என்று விமர்சித்தார் கட்சியின் பொருலாளர் வசீர் ஜூனைட்.
தேசிய காங்கரசின் பெருந்திரளான பேராளிகள் மேதின ஊர்வலத்திற்கு பங்கு கொள்ளவுள்ளதாகவும், மேதின மேடையில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா மேடையில் ஏறவுள்ளதாகவும் தலைவரின் பிரத்தியேக ஊடக செயலாளர் பஹத் தெரிவித்தார்