-எம்.வை.அமீர் –
சாய்ந்தருது வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஒன்றை 2016.04.26 ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்விப்பொழுது மாகாணசபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய ஆரிப் சம்சுடீன் முன்வைத்தார்.
ஆரிப் சம்சுடீன் குறித்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோது, இந்தப் பிரேரணையானது சாய்ந்தமருது வைத்தியசாலையினை தரமுயர்த்தல் என்ற பிரேரணையாகும். சாய்ந்தருது வைத்தியசாலை தற்பொழுது தரம் பி என்ற தரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது. இவ் வைத்தியசாலையானது கிட்டத்தட்ட 60,000 மக்களுக்கு சேவை வழங்குகின்ற வைத்தியசாலையாகவும் சுனாமியினால் முற்றாக அழிவுற்றதன் பின்னர் சாய்ந்தமருது பிரதான வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியசாலையாகவும் காணப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் சுபைர் அவர்களின் காலத்தில் இவ் வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் புல்மோட்டை வைத்தியசாலைகளையும் தளவைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முற்றுப்பெற்றிருந்தது. தற்பொழுது நிந்தவூர் மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகள் தளவைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டிருக்கின்ற போதிலும் இதுவரை சாய்ந்தமருது வைத்தியசாலை தளவைத்தியசாலையாக தரமுயர்த்தப்படாது இருக்கின்றமை பாரிய பாராபட்சமான நடவடிக்கையாகும். எனவே இவ் வைத்தியசாலையினை தளவைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். இதனை இந்த சபை ஏகமனதாக நிறைவேற்றுவதற்கு பிரேரணையாக இதனை நான் முன்வைக்கின்றேன் என்று தெரிவித்தார்.
எல்லோருக்கும் இன்று நல்லாட்சி ஏற்பட்டிருக்கின்ற காலகட்டத்தில், சேவைகள் மக்களினுடைய காலடியில் போயச்சேர வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்
உதாரணமாக கல்முனை பிரதேசத்தை எடுத்துக்கொண்டோமென்றால் பல வைத்தியசாலைகள் இருந்துகொண்டிருக்கின்ற பிரதேசமாகக் காணப்படுகின்றபொழுதும்கூட தளவைத்தியசாலைகள் அல்லாத வைத்தியசாலைகளில் பல வைத்தியசேவைகள் வழங்கப்படாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. அதாவது அங்கு அருகில் இருக்கின்ற ஒரு சில வைத்தியசாலைகளில் ஒரு சிறிய நோயினைக்கொண்டு அனுமதிக்காக நோயாளிகளைக் கொண்டுசெல்லுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த வைத்தியசாலையினுடைய வைத்தியர்கள் அவர்களை உடனடியாக அனுமதித்து மற்றைய அருகில் இருக்கின்ற அல்லது தூர இருக்கின்ற தளவைத்தியசாலைகளுக்கு அந்த நோயாளிகளை இடமாற்றுகின்ற ஒரு தளமாகவே இந்த வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.
உதாரணமாக 10.08.2012ஆம் திகதியன்று EP/01/BOA/004 என்ற ஒரு அமைச்சரவை வாரியப் பத்திரத்தின் மூலம் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சுபைர் முன்னாள் சுகாதர அமைச்சராக இருந்த சந்தரப்பத்தில் ஐந்தாவது கூட்டத்தில் நிந்தவூர் வைத்தியசாலையினையும் சாய்ந்தமருது வைத்தியசாலையினையும் புல்மோட்டை வைத்தியசாலையினையும் தளவைத்தியசாலைகளாக தரமுயர்த்த வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தினை எடுத்திருந்தார்கள்.
நான் ஏற்கனவே எனது பிரேரணையில் கூறியதுபோல் கிட்டத்தட்ட 60,000 மக்களுக்கு இந்த வைத்தியசாலை சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. காரைதீவு, கௌனி, சென்ரல்கேம்ப், மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களிலிருந்து வருகின்ற மக்களுக்கு இந்த வைத்தியசாலை சேவையினை வழங்கிவருகின்றதினை நாங்கள் யாரும் மறுக்கமுடியாது.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் இந்த வைத்தியசாலை தற்பொழுது கிட்டத்தட்ட 60 கட்டில்களைக் கொண்டு காணப்படுகின்றது. இந்த வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கூடத்தில் தேவைப்படுகின்ற blood analyser எனப்படுகின்ற ஒரு விடயம்இப்பொழுது உடனடித் தேவையாகக் காணப்படுகின்றது. மற்றும் இந்த வைத்தியசாலையில் X-Ray plant (கதிர்வீச்சுப் படக் கருவி) ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் முறிவுகளுக்காக அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகளை சம்மாந்துறை வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு அல்லதுதெற்கு தளவைத்தியசாலைகளுக்கு அனுப்பவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அதன்மூலம் அந்த நோயாளிகளுக்கு போக்குவரத்திலேயே அவர்களினுடைய நோய்கள் அதிகரித்து இன்னும் துன்பப்படுகின்ற ஒரு சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
மற்றது இந்த வைத்தியசாலைக்கு தற்பொழுது உடனடித்தேவையாக எமது அமைச்சர் அவர்களிடம் நான் சமரப்பிக்க வேண்டிக்கொள்வது தற்பொழுது இந்த வைத்தியசாலையில் காணப்படுகின்ற அம்பியூலன்ஸ் வண்டியானது பழையதாகவும் பழுதடைந்ததாகவும் காணப்படுவதனால் உடனடியாக இந்த வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டியொன்றை வழங்குமாறு மிகத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இந்த சாய்ந்தமருது வைத்தியசாலை கிட்டத்தட்ட 1952ம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட ஒரு பழைய பாரம்பரியத்தினைக் கொண்டு வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது. இந்த வைத்தியசாலையானது கடற்கரை ஓரத்தில் அமைந்து காணப்பட்டமையினால் 2004ம் ஆண்டு நாங்கள் எதிர்நோக்கிய சுனாமி பேரவலத்தின்மூலம் முற்றாக அழிவுற்று இந்த வைத்தியசாலை தற்பொழுது மெயின் வீதியில் அமைப்பதற்கு சாய்ந்தமருது மக்கள் தங்களுக்காக வைத்திருந்த விளையாட்டு மைதானத்தினை வைத்தியசாலைக்காக விட்டுக்கொடுத்தன் மூலம் அந்த வைத்தியசாலை மீது மக்கள் கொண்டுள்ள அவாவினை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஆகவே இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டு இந்த வைத்தியசாலை மெயின் வீதியில் அமையப்பெற்று அழகிய கட்டங்களைக் கெண்டிருக்கின்ற சந்தர்ப்பத்திலும்கூட தளவைத்தியசாலை என்று கூறுகின்ற பொழுது பெரியதாக நாங்கள் எதனையும் இந்த வைத்தியசாலைக்கு கேட்டுக்கொள்ளவில்லை. நாங்கள் கேட்டுக்கொள்வது வைத்திய நிபுணர்களை அதாவது முறிவு, இருதய நோய் போன்ற வைத்தியநிபுணர்களை கொண்டுவந்து மக்களுக்கு சேவைகளை வழங்குவதனையே நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். பாரிய வைத்தியசாலைகளில் காணப்படுவதுபோன்ற பாரிய அபிவிருத்திகளை நாங்கள் கேட்கவில்லை. இருக்கின்ற அபிவிருத்திகளை இருக்கின்ற நிபுணர்களைக் கொண்டு வந்து அவர்களின் மூலம் எமது மக்கள் அந்த வைத்தியசேவையினைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை எமது சுகாதார அமைச்சர் அவர்கள் செய்யவேண்டும் என்றே நாங்கள் இங்கு கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதரா அமைச்சர் அவர்கள் மிகத் தீவிரமாக எமது மக்களுக்கு எந்தவித பிரதேச வேறுபாடுகளும் இன்றி எந்தவித இன வேறுபாடும் இன்றி சமச்சீரான அபிவிருத்தியினை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான ஒரு முயற்சியில்; சிறப்பாக திட்டமிட்டு செயற்படுவதற்கு அவர்கள் முயற்சிசெய்துகொண்டிருக்கின்றா