இராணுவ முகாமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தாக கூறப்படுவது உண்மையில்லை :சம்பந்தன்

Sampanthan_Fotor

இராணுவ முகாமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

57வது படைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ள வடக்கு தமிழர்களின் காணிகள் குறித்து பார்வையிடுவதற்காகவே நாங்கள் சென்றிருந்தோம். 

அதன் போது இராணுவ முகாமின் பிரதான நுழைவாயில் திறந்து விடப்பட்டதன் காரணமாகவே முகாமுக்குள் உள்நுழைந்தோம். 

மற்றபடி அத்துமீறி பிரவேசிக்கவில்லை. 

இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்யக் கோரும் நபர்களின் கூற்றுக்களை வன்மையாக மறுப்பதுடன், கண்டனமும் தெரிவிக்கின்றேன் என்றும் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களுக்குள் உட்பிரவேசிக்க வேண்டுமாயின் முன்கூட்டியே அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தலைமையகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளது.