ஜப்பானில் நிலநடுக்கம் !

8505_content_japan-bullet-train-maglev-train-600ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹோன்ஷு தீவு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.

இன்று காலை 6.12 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும் இதனால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள் தான் இன்றைய நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஷின்கான்சென் என்ற புல்லட் ரயில் சேவை உள்பட அனைத்து ரயில் சேவைகளும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. அதனால் ஆண்டுதோறும் ஜப்பானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா உள்ளிட்ட எந்த அணு உலைகளுக்கும் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.