கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று இன்று 2 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை மற்றும் மே தினக் கூட்டம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி இம்முறை தனித்து மே தினக் கூட்டத்தை நடத்த தீர்மானித்திருந்தது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவுகளை எடுக்கவில்லை. எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர், இது சம்பந்தமான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.