பனாமா பேப்பர்ஸ்- பதவியை ராஜினாமா செய்தார் ஐஸ்லாந்து பிரதமர்!

201604060032375247_Iceland-PM-Sigmundur-Davio-Gunnlaugsson-Resigns-After_SECVPF
‘பனாமா பேப்பர்ஸ்’ அம்பலப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இந்த பட்டியலில் ஐஸ்லாந்து தீவு பிரதமர் சிக்மண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் டேவிட் மற்றும் அவரது மனைவி பிரிட்டீஸ் விர்ஜின் தீவுகளில் கடற்கரையை ஒட்டிய நிறுவனம் ஒன்றினை வாங்கியதற்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தன் மீதான குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் டேவிட் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐஸ்லாந்தி முன்னாள் பிரதமர் ஜோகன்னா வலியுறுத்தினார். 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐஸ்லாந்து மக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த பிரதமர் டேவிட், பதவி விலகும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவந்தார்.

இந்நிலையில்  பிரதமர் சிக்மண்டூர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒத்துக்கொண்டுள்ளதாக முற்போக்கு கட்சியின் துணைத் தலைவர் மற்றும் வேளாந்த்துறை மந்திரியான சிக்குர்டுர் ஐன்கி தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஐஸ்லாந்தில் கடந்த இரண்டு நாட்களாக பதற்றமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது.