சுதந்திரக்கட்சியினருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவுப்படுத்தப்படமாட்டாது : எஸ்.பி

S.B.Disanayake
ஹைட்பார்க்கில் மஹிந்த தரப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவுப்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிதிச்செயலாளர் அமைச்சர் திஸாநாயக்க இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குறித்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்த நிலையிலேயே எஸ் பி திஸாநாயக்கவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் கட்சியின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவமே முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ஏற்பட்டுள்ளது உட்கட்சிப்பிரச்சினை என்ற அடிப்படையில் அதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளமுடியும் என்றும் அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்