உட்கட்சி முரண்பாடு தொடர்பில் அந்தந்த கட்சிகளே கருத்தில் கொள்ளவேண்டும் : அஸ்மி ஏ கபூர்

அண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் தவிசாளருடனான அதன் தலைவரினுடான மோதுகை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வை சம்பந்தப்படுத்தி கருத்து வெளியிட்டிருப்பது தொடர்பில்  ஊடகங்களின் யூகங்களுக்கு அப்பாற்பட்டவர் அதாஉல்லா என்பதை மிகதெளிவாக கூறுகிறோம்

athaullah national congress

உட்கட்சி முரண்பாடு தொடர்பில் அந்த அந்த கட்சிகளே கருத்தில்  கொள்ளவேண்டும்

இன்னொரு கட்சி தொடர்பில் வீணாக திரிபுபடுத்த முனைவது அரசியலில் தூர நோக்கற்ற தன்மை ஆகும்.

வரலாற்றில் முஸ்லீம் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுகளில் சமுகத்தின் நலனுக்காகவும் வடகிழக்கு முஸ்லீம்களின் இனத்துவ அடையாளத்தை யும் உறுதிப்படுத்த அதாஉல்லாவா ல் ஏற்படுத்தப்பட்ட புரட்சி ஆகும்.

அந்த முயற்சியை முன்னின்று பின்னடைய செய்தவர்களுக்கு இன்று காலம் கடந்த ஞானமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

காலத்துக்கு காலம் முஸ்லீம் காங்கிரஸின்  தலைமைகளின் சாணக்கியத்தால்  பிளவு சர்வ சாதாரணமான விடயமாகும்.

அதாஉல்லாவும் அறிவுரை வழங்குகிறார் என போராளிகளுக்கு கூறி தவிசாளர்,செயலாளர் போன்றோரின் நியாயங்களை மழுங்கடிக்க மேற் கொள்ளும் ஊடக அரசியலாகும்.

கட்சிகளுக்குள் இடம் பெறும் உட் கட்சி பூசலை தீர்த்துக் கொள்ள வேண்டும் வீணாண யூகங்களால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை.
என்றார்.