அமெரிக்கா மூன்றாம் உலக நாடாக பின்தங்கிவிட்டது: டொனால்டு டிரம்ப்

d9adb947-9fea-4ed6-8c6b-6c48a4334240_S_secvpfஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கா மூன்றாம் உலக நாடாக ஆகிவிட்டது கவலை தெரிவித்துள்ளார். 

இன்று சால்ட் லேக் சிட்டியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், “அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகள் போல் பின்தங்கிவிட்டது. நீங்கள் துபாய் அல்லது சீனாவில் சென்று அங்குள்ள சாலைகளை பார்த்தால் தெரியும். அங்கு மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில்கள் உள்ளன. 

ஆனால் நியூயார்க் சென்று பாருங்கள், நாம் 100 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம். அமெரிக்கா ஏழை நாடாகிவிட்டது. நான் அதிபரானால் அமெரிக்காவை மீண்டும் ஆற்றல் மிக்க நாடாக மாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.