கேமரூனில் 89 நைஜீரிய தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை!

aedb9a4d-5edb-42a2-88d7-377b8f86ee76_S_secvpf

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களை கொன்று குவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தகின்றனர்.

நைஜீரியா மட்டுமின்றி அண்டை நாடான கேமரூனிலும் தாக்குதல்களை நடத்துகின்றனர். அங்கு நைஜீரியாவின் எல்லையை ஒட்டியுள்ள வடக்கு பகுதியில் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 850 போகோ ஹராம் தீவிரவாதிகளை கேமரூன் அரசு கைது செய்தது. இவர்களுக்கு கடுமையான தண்டணை விதிக்க கடந்த 2014–ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி அங்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு குற்றம் சாட்டப்பட்ட 89 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கேமரூனில் மரண தண்டனை உருவாக்கப்பட்டதற்கு பின்பு முதன் முறையாக இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து கேமரூனில் நீதித்துறை முறையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அந்நாட்டு மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.