உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 16-வது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பின்னர் விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்கார் ஸ்டானிக்சை அற்புதமாக விளையாடி 62 எடுத்தார். அதில் 4 சிக்ஸர்கள் விளாசினார். இலங்கை அணி சார்பில் குலசேகரா 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 18.5 ஓவர்களில் 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தில்சான் 56 பந்துகளில் 83 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசியில் களமிறங்கிய கேப்டன் மேத்யூஸ் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தர்மசலாவில் நாளை நடைபெறும் 17வது ஆட்டத்தில் குரூப் 2ல் உள்ள ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதயுள்ளான.