பொறுமையே தலைவரின் ஆயுதம் : சபீஸ் !

atha safees

சித்திரக் குள்ளர்களிலே மிக உயரமானவன் நான்தான் என சந்தோசப்படும் ஒருசிலர் நாளாந்தம் எழுதும் எழுத்துக்களை பார்த்து நகைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

நோய்க்குரிய அறிகுறிகள்தான் அவர்கள், நோய் எதுவென்று கண்டு கொண்டவர்கள் நாங்கள், எம்மக்கள்.

துரோகிகளுக்கும், சுயநல அரசியல் விற் பனையாளர்களுக்கும் இனிஒருபோதும் இடம்கிடையாது எமது மக்கள் அணியில்.

5 ம் நூற்றாண்டில் பிறந்த ரோம தத்துவவியலாளரான செனக்கா கூறியது இது—

“ நீங்கள் போதுமான காலம் காத்திருந்தால் ,மக்கள் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள்,உங்களை பிரமிக்கச் செய்வார்கள்”—
மக்கள்மீது உங்களுக்கு எரிச்சல் ஏற்படுவதோ,அவர்கள்மீது உங்களுக்கு கோபம் ஏற்படுவதோ,அவர்களுக்கு போதுமான நேரத்தை நீங்கள் கொடுத்திருக்காததன் விளைவுதான் என்று அவர் விளக்குகின்றார்.

சில சமயங்களில் அதிகளவு பொறுமை தேவைப்படும் என்று எச்சரித்தார் பலவருடங்கள் கூடத் தேவைப்படும் என கூறிய அவர்

“ஆனால் இறுதியில், மக்கள் தங்களுடைய நல்ல பக்கத்தை உங்களுக்கு காட்டுவார்கள். அதற்கு நீங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டும். அந்த நல்ல பக்கம் தானாக வெளிப்படும் என்றார் .

நமது தலைமை அதாஉல்லா ஒருவேளை 1ம் நூற்றாண்டில் பிறந்திருந்தால்கூட இக்கருத்திலிருந்து மாறுபட்டிருக்கமாட்டார்.

ஒருசிலர் ஏராளமான காரணங்களுக்காக பொய்யுரைக்கின்றனர் ஏனெனில் மிகக் குறைந்த முயற்சியில் தங்களுக்கு வேண்டியவைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு முயற்சியாக அதனை அவர்கள் பார்கின்றனர் இதனையும் காலப்போக்கில் மக்கள் அறிந்து கொள்வர்..

தேசியகாங்கிரஸ்
SM சபீஸ்