பொருளாதார நெருக்கடியை சீர்ப்படுத்த ராஜபக்ச வரி என்ற பெயரில் புதிய வரி அறவிடப்பட வேண்டும் !

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்ப்படுத்த ராஜபக்ச வரி என்ற பெயரில் புதிய வரி அறவிடப்பட வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரி அறவீட்டு திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

ravi-karunanayake

முன்னைய அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களால், தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், 

முன்னாள் பிரதி நிதியமைச்சரான பந்துல குணவர்தன மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் வித்தியாசங்கள் குறித்து தெளிவுபடுத்தினார். 

யார் பெறுமதி சேர் வரியை அறிமுகப்படுத்தியது. 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பிரதி நிதியமைச்சராக இருந்த பந்துல குணவர்தனவே நிதியமைச்சு பெறுமதி சேர் வரியை அறிமுகம் செய்தார். 

அந்த பந்துல குணவர்தனவே தற்போது பெறுமதி சேர் வரிக்கு எதிராக பேசுகிறார். பந்துல மற்றும் ரவியிடம் நாங்கள் வித்தியாசங்களை காணவில்லை. வித்தியாசத்தை எங்களுக்கு ஒப்புவித்து காட்டுங்கள்.

பந்துல குணவர்தன நன்றாக சிங்களம் பேசுவார். நிதியமைச்சர் உடைந்தது போல் சிங்களத்தை பேசுகிறார். அதுதான் இருவருக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் என்றார்.