சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றையும் கூட்டமொன்றையும் நடாத்த உள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே துமிந்த திஸ்ஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த கூட்டத்திலும் பேரணியிலும் பங்கேற்பதற்கு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.
கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எனவே, இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டியதில்லை.
இந்த தீர்மானமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
கட்சிக்கு எதிராக ஊடகங்களில் வீரர்களைப் போன்று எவரேனும் கருத்து வெளியிட்டால் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது அம்பலமன்று, ஒழுக்கமும், கொள்கையும் உடைய ஓர் கட்சியாகும்.
எனவே, கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் யார் யார் பங்கேற்கின்றார்கள் என்பது குறித்து தாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.