தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ள மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கும் நளினி!

தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி.
nalini_1770860g

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக நேற்று பரவிய தகவலால் வேலுார் சிறை வளாகம் பரபரப்பானது.

ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இன்று நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்தார். 

தான் விடுதலையாவேன் என மாநில அரசு மீதும் மத்திய அரசு மீதும் நளினி நம்பிக்கையோடு இருப்பதாக புகழேந்தி, “நளினி அண்மையில் இறந்த அவரது தந்தையின் ஈமக்காரியங்களுக்காக 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். 

ஆனால் இன்னும் அதன் மீது முடிவெடுக்கவில்லை. திங்கள் கிழமைக்குள் பரோல் கொடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வோம்“ என்றார். 

சென்ற மாதம் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தன் தந்தையை காண பேரறிவாளன் 24 ஆண்டுகளில் முதல் முறையாக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவின் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அரசு. 

நளினிக்கு பரோல் கிடைக்குமா என்பது குறித்த தகவல் நாளை தெரியவரலாம் என்கிறது சிறை வட்டாரம்.