இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக அழிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது.
சுதந்திரக் கட்சியை பாதூக்கவோ அல்லது கட்சியின் கொள்கைகளை முன்னெடுக்கவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கவில்லை.
மிகத் தெளிவாக திட்டமிட்ட அடிப்படையில் சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட போதிலும், மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் கட்சிக்கு நன்மை செய்வார் என எதிர்பார்த்தோம்.
எனினும் அந்த எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதா அல்லது கட்சியின் நலனுக்காக தொடர்ந்து செயற்படுவதா என்பதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள்
தீர்மானிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.