வல்லரசு கனவில் மிதந்துவரும் சீனா, ராணுவ பலத்தை அதிகரித்து வருவதுடன் விண்வெளி ஆய்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது.
அவ்வகையில், விண்வெளியை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ஆய்வுக்கூடத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள சீனா, இந்த ஆண்டில் இரண்டாவதாக ‘டியாங்காங்-2’ என்ற ஆய்வுக்கூடத்தை விண்வெளியில் அமைப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, விண்வெளி வீரர்களை சுமந்துச் செல்லும் ’ஷென்ஸோ-11’ என்ற விண்கலத்தையும் தயாரித்துவரும் சீனா, அந்த விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி ‘டியாங்காங்-2’ ஆய்வுக்கூடத்தில் இருந்தபடி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மேலும், தனது பகைநாடான ரஷியாவின் மிர் விண்வெளி ஆய்வு மையத்துக்கு போட்டியாக, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையத்தை நிறுவவும் சீனா திட்டமிட்டுள்ளது.