வடக்கு ரஷியாவின் கோமி பிராந்தியத்தில் உள்ள செவர்னயா நிலக்கரிச் சுரங்கத்தில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் புதையுண்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் திடீரென ஏற்பட்ட விஷவாயு கசிவால் இந்த விபத்து நேர்ந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின.
புதையுண்டவர்களை மீட்கவந்த படையினர் இரு பிரேதங்களையும் மேலும் சிலரை உயிருடனும் மீட்டனர். மீதி இருக்கும் 26 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று திடீரென மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நில அதிர்வில் ஐந்து மீட்புப் படையினர் மற்றும் மேலும் ஒருவர் பலியானதாக அந்நாட்டின் அவசர உதவித்துறை மந்திரி விளாடிமிர் புச்கோவ் அறிவித்துள்ளார்.
சுரங்கத்துக்குள் புதையுண்டிருக்கும் உயிர்பிழைக்க சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்ட அவர் இவ்விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசின் சார்பில் வீரதீர விருதுகள் அளிக்கப்படும் எனவும் கூறினார்.