ஈரான் பாராளுமன்ற தேர்தல் : அதிபர் ரெளஹானியின் கூட்டணி முன்னிலை !

மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரான் நாட்டில் 290 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன் தினம்) வாக்குப்பதிவு நடைபெற்றது.

IRAN-VOTE-REGISTRATION-ROWHANI
இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்ததால் மாலை 6 மணியுடன் முடிவடைய வேண்டிய வாக்குப்பதிவு சுமார் ஆறுமணி நேரம் நீட்டிக்கப்பட்டு, பின்னிரவு 11.45 அளவில் முடிவடைந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈரான் தேர்தலில் முதற்கட்ட முடிவுகளின் படி தற்போதையை அதிபர் ஹாசன் ரோஹனியின் கூட்டணி கட்சி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. 

தலைநகர் டெஹ்ரானி முதலில் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 30 இடங்களில் 29 இடங்களை ரோஹனின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலின் மூலம், மிதவாதியான அதிபர் ஹஸன் ரெளஹானியின் அரசுக்கு, நாடாளுமன்றத்தில் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது, நாடாளுமன்றத்தில் பழமைவாதக் கட்சியினர் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், ரெளஹானி அரசால் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற நிபுனர்களுக்கான் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்ற நிபுணர் தேர்தலில் மத குருமார்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள். பின்னர் அவர்கள் இணைந்து தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அவர் “சுப்ரீம் லீடர்” எனப்படுவார்.

வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டில் நடைபெறும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.