மீன்பிடி, நீரியல்வள சட்டமூலத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. இந்நிலையிலேயே இங்குள்ள மீனவர்களை தண்டிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தால் சரத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்து சமுத்திர வலயத்துக்குரிய சட்டத்திட்டங்களுக்கு பொருந்தாத திருத்தங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை எமது நாட்டு மீனவர்களை பாதிக்கும் செயலாகும். அரச ஐரோப்பிய சட்டத்துக்கு பணிந்துள்ளது.
தாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய மீனவர்களின் ஊடுருவல் தடுக்கப்படும் என அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வடக்கு மீனவர்களை அரசு திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றியுள்ளது. இதை செய்ய முடியாத நிலையிலேயே மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார்.
அத்துடன், இலங்கையின் தேசியக்கொடியை போட்டுக்கொண்டு மீன் மீன்பிடியிலும் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.
அண்மையில் கச்சதீவு திருவிழா நடந்தது. அதில் இந்திய மீனவர்கள் பங்கேற்கவில்லை. அந்தவகையில் எமது நாட்டு எல்லையைக்கூட பாதுகாக்க முடியாதநிலையே இன்று இருக்கின்றது.
இது கவலைக்குரிய விடயமாகும். எனவே, இலங்கை மீனவர்களை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.