ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த அமைப்பின் ஆரம்பத்தில் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் மஹிந்த ராஜபகச், நாமல் ராஜபக்சவின் தலைமையில் கூடியுள்ளனர்.
அதன் பின்னர் அதற்கு மஹிந்த ராஜபக்ச விசேட பிரதிநிதியாக பசில் ராஜபக்சவை ஈடுபடுத்தியுள்ளார். எனினும் அதற்கு ஏனைய கட்சி தலைவர்கள் மற்றும் நாமல் ராஜபக்சவினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தனது பிரதிநிதியாக பசில் ராஜபக்சவை ஈடுபடுத்துவதாகவும், தான் இதற்கு பிறகு விசேட கூட்டங்களை தவிர ஏனைய கூட்டங்களில் கலந்துகொள்ள போவதில்லை என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமை அனைத்து எதிர்ப்புகளையும் கண்டு கொள்ளாமல் மஹிந்த ராஜபக்சவின் அதிகார கொண்ட பிரதிநிதியாக பசில் ராஜபக்ச இந்த சந்திப்புகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் டலஸ் அலகபெரும், குமார வெல்கம, சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் இடைக்கு இடை குறித்த கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுள்ளதாகவும், தற்போதைக்கு ஒரு வழக்கமாக பசில் ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் ஒவ்வொரு வாரமும் இந்த ஆய்வு கூட்டம் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு கூட்டங்களின் தன் மீது தாக்கப்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் பசில் ராஜபக்ச அதிகமான அவதானத்தை செலுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி அமைப்பதில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கீழ் மட்டத்திலுள்ளவர்களின் மனவுறுதி தளம்பாமல் இருக்க, புதிய கட்சி தொடர்பில் பிரதான செய்தி வெளியிடப்படும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் 24 மணித்தியாங்கள் நிறைவடைவதற்கு முன்னர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு சென்ற நிலையில் மஹிந்த ராஜபக்ச தரப்பில் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன ஆகியோர் பசில் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்தனர்.
மஹிந்த தோல்வியடைந்ததற்கு பசில் தான் காரணம் எனவும் அதற்கான முழுமையான பொறுப்பை பசில் ராஜபக்ச ஏற்க வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் கூறினார்கள்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒப்படைத்த பின்னர் கட்சியின் மத்திய செயற்குழுவில் பதவி வகித்தவர்களின் பதவிகள் மாற்றமடைந்த பின்னர், சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வகித்த பசில் ராஜபக்சவுக்கு எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை.
அதற்கு மஹிந்த ராஜபக்ச உட்பட கட்சியை சேர்ந்த ஒருவரினாலும் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை.
தற்போது பசில் ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை உட்பட இழக்கப்படும் நிலைமை உருவாகியுள்ள நிலையில், அவரை புதிய கட்சியின் பிரதானியாக்கி மஹிந்த ராஜபக்ச அவருக்கு கட்சி உரிமை பறிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்கான வழியை கண்டு பிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.