தனக்காக ஓடும் ரவூப் ஹக்கீமும் தனது சமூகத்திற்காக ஓடும் றிசாத்தும் !

இதய கனி

 

 முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் அகால மரணத்திற்கு பின்னர் அந்தக்கட்சியின் தலைமைத்துவத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட சகோதரர் ரவூப் ஹக்கீம் சமூக அரசியலை விட சதிகார அரசியலில் நாட்டம் கொண்டு தனக்குச்சமனாக வளர்ந்துள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனை வீழ்த்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றார். பல்வேறு கோணங்களில் இருந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அம்புகளை அவர் எய்து வருகின்ற போதும் இறைவனின் துணையால் ரிசாட்டை வீழ்த்த முடியாதுள்ளது.

rauff hakeem rishad

 

மர்ஹூம் அஷ்ரப்பின் கண்ணீராலும், தியாகத்தினாலும் வளர்க்கப்பட்டு பின்னர் ஹக்கீமுக்கு கைமாறிய அந்தக்கட்சி அதல பாதாளத்தில் இப்போது சென்று கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் ஜனாதிபதிகளையும், அரசாங்கங்களையும் உருவாக்குவதிலும் ‘கிங்மேக்கராக’ திகழ்ந்த அஷ்ரப்பின் கட்சி, பேரம் பேசும் சக்தி பெற்ற ஒரு கட்சியென அடையாளப்படுத்தப்பட்டது. அவரின் அகால மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் ஊகங்களும் எழுப்பப்பட்ட அந்த காலத்தில் ’தனது நப்ஸ்’ கேட்பதாய் கூறி தலைமத்துவத்தை தட்டிப்பறித்தார் சகோதரர் ஹக்கீம். மரக்கட்சி இவரின் கரங்களில் சிக்குண்ட பின்னர் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கட்சியிலிருந்து அவ்வப்போது வெளியேறியதே கடந்த கால வரலாறு. 

 

மர்ஹூம் அஷ்ரப்பின் காலத்திலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சில முக்கியஸ்தர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் வெளியேறி பின்னர் அவர்கள் சமூக அந்தஸ்திலிருந்து செல்லாக் காசாகினர். எனினும் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் போக்கு சமுதாயத்திற்கு பயன் தராமையால் வேதனையடைந்த சில அரசியல்வாதிகள் வெளியேறி தனிக்கட்சியமைத்து சமூகத்திற்கு பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த வகையில் அதாவுல்லா ‘தேசிய காங்கிரஸை’ அமைத்தார், ரிசாட் ‘மக்கள் காங்கிரஸ்’ அமைத்தார் ஹிஸ்புல்லா மட்டக்களப்பின் குட்டி அரசர் ஆனார். ஆனால் ஹக்கீமுக்கு நிகரான தலைவராக அதைவிட வேகமான, விவேகமான அரசியல்வாதியாக ரிசாட் மாறியதே இப்போதஉ ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பெருத்தலையிடி. 

 

முஸ்லிம் காங்கிரஸ் அப்போது தங்கத்தட்டில் வைத்து ஹக்கீமுக்கு கையளிக்கப்பட்டது. ஆனால் அகதியாக வந்த ரிசாட் எம் பி ஆகி, அமைச்சராகி, கட்சியின் தலைவரானர். அஷ்ரப்பை போல் மாடாய் உழைத்து, ஓடாய்த்தேய்ந்து மக்கள் காங்கிரஸை உருவாக்கி வளர்த்தெடுத்தார் ரிசாட். அவரது வீறுநடை நோக்கிய பயணத்தால் தனது அரசியல் இருப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது என்ற காழ்ப்புணர்வின் வெளிப்பாடே ஹக்கீமின் சதிமுயற்சிகளுக்கு காரணமாய் அமைந்துள்ளது. 

 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ’கோல் பேஷில்’ தனது உடல் ஆரோக்கியத்திற்காக காலையும், மாலையும் ஓடுகிறார்., மக்கள் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம் சமூகத்திற்காகவும் மக்களின் ஆரோக்கியத்திற்காவும் இரவும், பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி ஓடித்திரிகிறார். இது தான் இரண்டு தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம். 

 

மர்ஹூம் அஷ்ரப் 1986ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸை கொழும்பு, தெமட்டகொட பாஷா விலா வில் அரசியல் கட்சியாக, முஸ்லிம்களின் தனித்துவக்கட்சியாக கட்சியாக பிரகடனம் செய்தார். அப்போது பேரினவாத கட்சிகளான பச்சையிலும் நீலத்திலும் ஒட்டி இருந்த நமது சமூகத்திலிருந்த பல் விழுந்த பழஞ்சிங்கங்கள் மாதலைவர் அஷ்ரப்பை பேரினவாதிகளிடம் காட்டிக்கொடுத்தனர். பச்சையிலும் நீலத்திலும் தமக்குக்கிடைக்கும் எச்சில் எலும்புகளும் அற்ப சொற்ப சலுகைகளும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவர்களிடம் குடி கொண்டது. இதனால் அஷ்ரப்பை தாருமாறாக வசை பாடினர், திட்டித்தீர்த்தனர். அதே போன்று தான் ரிசாட்டையும் ஹக்கீம் திட்டித்தீர்க்கின்றார். 

 

தனது தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற குலை நடுக்கத்தால் தனது ஏவலாளர்கள் மூலமும், அடிவருடிகள் மூலமும் 

ரிசாட்டை வீழ்த்த பல்வேறு சதி வேலைகளை அரங்கேற்றி வருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தனது கட்சியய்ச்சார்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் பொல்லுப்போடும் சட்டத்தரணியுமான ஒருவரையும், மன்னாரைச்சேர்ந்த பக்காத்திருடன் ஒருவனையும் கூலிக்கமர்த்தி கொழும்பு ரேணுகா ஹோட்டலில் ரிஷாட்டுக்கு எதிரான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தினார் குமாரர் ஹக்கீம். 

 

இந்த கில்லாடிகள், ரிஷாட் களவான முறையில் சொத்து சேர்ப்பதாக போலி ஆவணங்களை கோப்புகளில் வைத்து பத்திரிகையாளர்களிடம் காட்டி ரிசாட்டைக் கேவலப்படுத்த முனைந்தனர். இது ஹக்கீமின் நேரடி டைரக்‌ஷனில் இடம்பெற்ற ஒரு நாடகம். இதன் மூலம் ரிசாட்டை சீரழித்து அவரை தோல்வியுற செய்வதே  அவரின் எண்ணமாக இருந்தது. எனினும் இறைவன் அவரின் எண்ணத்தில் மண்ணைப்போட்டான். 

 

அவரது இதுகால வரையும் எந்த முயற்சியும் ஈடேறாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் இணையதளங்களிலும் அவரது கால்களை நக்கித்திரிபவர்களின் முகநூல்களிலும் ரிசாட் விரைவில் கைது செய்யப்படுவாரென்ற முன்னறிவித்தலை விட்டு வருகின்றார். ஆனால் இந்த பேஸ்புக் கூலிப்பட்டாளங்களுக்கு நாம் ஒன்றை மட்டும் நியாபகப்படுத்த விரும்புகின்றோம். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்பாகத்தலைவரின் மரணம் தொடர்பில் உங்கள் தலைவர் ஹக்கீம் மீதும் வலுவான சந்தேகங்கள் உண்டு. இந்த மரணத்திற்கு முதல் நாள் நடந்த சம்பவங்கள் இதனை வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமன்றி குமாரியின் கொலை தொடர்பில் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் அவரது நண்பியான ’நெலும்’ நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொலிஸாரின் வாக்கு மூலங்கள் ஆவணங்கள் ஆகியவை மகிந்த அரசினால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய அரசில் இவைகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால் உங்களின் தலைவரின் கதி என்னவாகும்?

 

அபூஜஹீல்களுக்கு விரைவில் அழிவு கிடைக்கும் என்பதே உண்மையானது.