வ/கி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை வழிநடாத்திச் செல்ல வÆகிழக்கின் மாகாண சபைகளின் முஸ்லிம் உறுப்பினர்களினதும், வ/கிழக்கின் உள்ளூராட்சி மன்றங்களின் முஸ்லிம் உறுப்பினர்களினதும் ஒன்றிணைந்த ஒன்றியமும் உருவாக்கப்பட்டு வ/கிழக்கை மொத்தமாக பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசுக்கு ஆதரவான சகல மக்கள், பிரதிநிதிகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டு அதனூடாக புதிய அரசியலமைப்புக்கான முஸ்லிம்களின் அபிலாiஷகளைப் பிரதிபலிக்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் வ/கி முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணி தலைவருமான சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸத்தீன் கூறியுள்ளார்.
அமைச்சர் ஹலீம், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரோடு இணைந்து தாமும் ஒரு கூட்டமைப்பை உருவாக்க தயாராக இருப்பதான அமைச்சர் றிஷhத் பதியூத்தீனின் அறிக்கையில் எல்லாரும் இணைந்து தீர்வு திட்டத்திற்கான ஆலோசனைகளை வைக்கப்போவதான எண்ணம் பாராட்டப்பட வேண்டியதுதான்.
எனினும், வடகிழக்கை தாயகமாகக் கொள்ளாதவர்களின் செல்வாக்கு, ஆலோசனைகளை தவறான வழியில் திசை திருப்பிவிடக்கூடும் என்பது அனுபவ ரீதியான அச்சத்திலுள்ளதாகும்.
மேலும், உண்மையான ஒரு பலம் பொருந்திய தேசிய அரசாங்கம் முற்று முழுக்க பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்போது பொது மக்களிடம் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைக் கேட்டுப் போவதற்கு முன்னர் தனது எண்ணத்தில் இருந்த சீர்திருத்தங்களை உள்ளடக்கியதான ஒரு நகல் மசோதாவை முன்வைத்து பொது மக்களிடம் அபிப்பிராயம் தேடியிருக்க வேண்டும். இது குதிரைக்கு முன் வண்டியைக் கட்டி வெள்ளோட்டம் பார்க்கும் முயற்சி போலுள்ளது.
எது எவ்வாறாயிருப்பினும் முஸ்லிம்களின் அபிலாiஷகளை பிரதிபலிக்கும் ஓர் தீர்வு திட்டத்தினை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முஸ்லிம் தரப்பில் இருந்து வ/கி முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றியம் அமைத்து உடனடியாக இயங்கச் செய்வது மிகுந்த அவசரமும் அவசியமுமான தேவைப்பாடாகும்.
ஆனால், பூனைக்கு மணி கட்டப்போகும் போது சொந்த நலன்களும் தூர நோக்கற்ற கட்சி நலன்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு மொத்தத்தில் முஸ்லிம்கள் தூக்கியெறியப்படப் போவதை இருந்துதான் பார்க்க வேண்டும்.
வ/கி முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ இன அடையாளத்தை, அங்கீகாரத்தை, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எல்லாருமாய்ச் சேர்ந்து இந்த ஒன்றியத்தை உருவாக்கி செயற்படுத்த ஓர்மம் பூணவேண்டும்.
மேலதிகமாக வ/கிழக்கைச் சார்ந்த முஸ்லிம் புத்திஜீவிகளின் காத்திரமான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வ/கி முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றியம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு சுதந்திரமாக செயற்பட வேண்டும்.
இவைகள் தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தீர்வு விவகாரம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதைபோலவே நீடிக்கும் என்றும் கூறினார்.