போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டொனால்ட் டிரம்ப் ஆவேசம்!

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல என்று பேட்டியளித்துள்ள போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், வாடிகன் நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், ‘ஐயோ.., டொனால்ட் டிரம்ப் இப்போது அமெரிக்க அதிபராக இல்லாமல் போனாரே..’ என்று போப் வேதனைப்படுவார் என கூறியுள்ளார்.
e4f58ad9-6173-4b07-a9c5-eadadacdd6c5_S_secvpf
 
இதுதொடர்பாக, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கியாவா தீவில் ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப், தனது பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
 
தனியொரு மனிதரின் மதநம்பிக்கை தொடர்பாக ஒரு மதத் தலைவர் கேள்வி எழுப்புவது அழகல்ல; அவமானகரமானது. ஒரு கிறிஸ்துவனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். தற்போதைய அதிபரின் (ஒபாமா) ஆட்சியின்கீழ் கிறிஸ்துவ மதம் தொடர்ந்து தாக்கப்படுவதையும், பலவீனப்படுத்தப்படுவதையும் இந்த நாட்டின் அதிபரானால் நான் அனுமதிக்க மாட்டேன்.
 
எனக்கு எதிராக போப் பிரான்சிசிடம் சிலர் தெரிவித்த ஒருதரப்பு கருத்தை மட்டுமே அறிந்துகொண்டு போப் பிரான்சிஸ் என்னைப்பற்றி விமர்சித்துள்ளார். எனக்கு எதிராக போப்பை திருப்பி விட்டவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும். எப்போதாவது ஐ.எஸ். தீவிரவாதிகளால் வாடிகன் அரண்மனை தாக்கப்பட்டால் ‘ஐயோ.., டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இல்லாமல் போனாரே..’ என்று வேதனைப்படுவார். கடவுளிடமும் இதையே வேண்டிக் கொள்வார்.
 
டொனால்ட் டிரம்ப் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.