இலங்கை இந்தியாவின் மற்றொரு மாநிலமாக மாறும் அபாயம் : மஹிந்த

இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
mahinda
ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று முன்னிலையாகி சாட்சியமளித்த பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் பொது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என அவர் தெரிவித்தார். 

இந்த நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால், இலங்கை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகவே மாறும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எல்லா அபிவிருத்தி திட்டங்களும் முடங்கிப் போயிருக்கின்றன. 

ஊடக நிறுவனங்கள் அரசாங்கத் தலைவர்களை விமர்சிக்காமல், அவர்களின் புகழ்களை வெளிக்கொண்டு வருகின்றன. 

இந்த அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.