அடுத்த மாதம் கியூபா செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா!

 

அமெரிக்கா, கியூபா ஆகிய 2 நாடுகள் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை நிலவி வந்தது. இப்போது அவ்விரு நாடுகள் பகைமைக்கு விடை கொடுத்துவிட்டு உறவுக்கு நட்புக்கரம் நீட்டி உள்ளன. தூதரக உறவும் மலர்ந்துள்ளது.

5cbd0aab-6e3b-4b13-8a42-71131208f639_S_secvpf

இந்த உறவினை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபாவுக்கு செல்ல உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கியூபா பயணம் குறித்த செய்தியை ஒபாமா தற்போது உறுதி செய்துள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒபாமா தெரிவித்துள்ளதாவது:-

இருநாடுகள் உடனான உறவை மேம்படுத்தும் பொறுட்டு அடுத்த மாதம் நான் கியூபா பயணம் மேற்கொள்கிறேன். இந்த முயற்சியால் கியூபா மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். 

தற்போதும் கியூபா அரசாங்கத்துடன் எங்களுக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அதனை நான் நேரடியாகவே கூறுவேன். அமெரிக்கா எப்பொழுதும் மனித உரிமைக்காக உலகம் முழுவதும் குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா இடையே வர்த்த விமானங்களை இயக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.