அடுத்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரான் !

Unknownஈரான் அடுத்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை 3 டேங்கர் கப்பல்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

இதில், 20 லட்சம் பேரல்களை பிரான்சின் டோட்டல் நிறுவனம் இறக்குமதி செய்கிறது. மீதமுள்ள 20 லட்சம் பேரல்களை ரஷ்யா மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் வாங்கியிருப்பதாக ஈரானின் நேஷனல் ஆயில் கம்பெனி நிர்வாக இயக்குனர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே, அளவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் சப்ளை இருந்து வரும் நிலையில், அண்மையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதற்கிடையே ஈரானின் தற்போதைய தினசரி ஆயில் ஏற்றுமதியானது 13 லட்சம் பேரல்களை எட்டியுள்ளதாக கூறிய துணை ஜனாதிபதி, அடுத்த மாதம் 15 லட்சம் பேரல்களாக அதிகரிக்கும் என்று கூறினார். மேலும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் தினசரி 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.