சவூதி அரேபிய கல்வி அலுவலகத்தில் துப்பாக்கிசூடு: 6 பேர் பலி!

 
சவூதி அரேபியாவின் ஜாசான் மாகாணத்தில் கல்வித்துறை அலுவலம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று வந்த ஆசிரியர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 
632b01b1-f993-486d-8fbc-9dd89055428f_S_secvpf
துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். எதற்காக துப்பாக்கிசூடு நடத்தினர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த கல்வி அலுவலம் வெளியே, ஆம்புலன்ஸ் வண்டிகள் அணி வகுத்துள்ளன. சம்பவ இடத்தை சுற்றிலும் போலீஸ் அதிகாரிகளும் குவிந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பற்றி விவரித்த மாகாண உள்துறை மந்திரி, இது ஒரு குற்றச்செயல் என்றார். எப்படி 6 பேரும் கொலைசெய்யப்பட்டனர் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் துப்பாக்கிசூடு நடைபெற்றது என்று செய்தி வெளியிட்டு வருகின்றன. 

சவூதி அரேபியாவில் இது போன்ற துப்பாக்கிசூடு நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்றாகும். இருப்பினும், ஜசான் மாகாணம், ஏமன் எல்லையில் அமைந்துள்ளதால், இந்த பகுதியில், ஏமன் கிளர்சிக்குழுக்களுக்கு எதிராக சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுக்குழு வான்வழி தாக்குதல் நடத்த துவங்கியதில் இருந்து இங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.