காலையில் தூங்கி எழுந்தவுடன் கால்களை கீழே வைத்தவுடன் பாதம் அதுவும் குதிகால் மிகவும் வலிக்கின்றதா? காலையில் எழுந்தவுடன் கால்களை கீழே வைக்கவே பயமாக இருக்கின்றதா? அதே போல் வெகுநேரம் உட்கார்ந்திருந்து எழுந்தாலும் இந்த வலி இருக்கின்றதா?
இரண்டு குதிகால்களிலும் இருக்கின்றதா? அல்லது ஒன்றில் இருக்கின்றதா? கொஞ்சம் நடந்த பிறகு வலி குறைகின்றதா? நெடு நேரம் உட்கார்ந்து எழுந்த பிறகு வலிக்கின்றதா? குறைந்த வலி அல்லது அதிக வலி இருக்கின்றதா? வலி, எரிச்சல், குத்தல் வலி போன்ற பாதிப்புகள் குதிகாலில் இருக்கின்றதா? வீக்கம் அல்லது சிவந்து இருக்கின்றதா? இந்த பாதிப்பு மருத்துவ சிகிச்சையில் தீரக் கூடியதே.
ஆனால் விட்டு விட்டால் அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்காக குதிகால் சீட்டுகள், ஜெல் சீட்டுகள் என பல விதங்களில் பாதுகாப்பு உறைகள் உள்ளன. மருத்துவ ஆலோசனை மூலம் இதனை உபயோகப்படுத்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 5,000 முதல் 10,000 முறை பாதத்தினை நாம் நடப்பதற்கு பயன்படுத்தி அடிகள் வைக்கின்றோம்.
இவை எலும்பு, தசை, தசைநார்களின் முயற்சியினால் நடக்கின்றது. இதில் ப்ளான்டார் ப்பேஸியா எனும் தசைநாரில் வீக்கம் ஏற்படும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதுவே குதிகால் வீக்கத்திற்கு முக்கிய காரணம் ஆகின்றது. அதிகம் கால்களுக்கு வேலை கொடுப்பவர், கால்களுக்கு வேலையே கொடுக்காதவர் இருவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.
* கால்களை முறையாக வைத்து நடக்காதவர்களுக்கும்
* அதிக எடை உடை யோருக்கும்
* ஓய்வே இல்லாது காலுக்கு வேலை கொடுப்பவர்களுக்கும்
* தேய்ந்த, முறையில்லாத காலணி அணி பவர்களுக்கும்
* முதுமையிலும்
* காலில் அடிபடும் பொழுதும் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.
வலி அதிகமாய் இருக்கும் பொழுது செய்ய வேண்டியவை :
* காலுக்கு ஓய்வு கொடுங்கள்.
* ஐஸ் பை வைத்து 20 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள். காலை, மாலை இரு வேளையும் செய்யுங்கள்.
* எலும்பு நிபுணரின் அறிவுரை பெறுங்கள்.
* குதிகால் காலணி என சிறப்பு உறைகள் இருக்கின்றன. அவைகளை பயன்படுத்துங்கள்.
* பாதத்திற்கான பயிற்சிகளை அறிந்து தினமும் அவைகளை சில நிமிடங்கள் செய்யுங்கள். கர்ப்ப காலத்திலும் இத்தகு பாதிப்பு ஏற்படலாம்.
குதிகால் வலி தவிர்க்க:
* கரடு முரடு, கடும் தரைகளில் வெறும் காலுடன் நடக்காதீர்கள்.
* அதிக எடை காலுக்கு பாதிப்பு எனவே எடையை குறைத்து விடுங்கள்.
* இதற்கென இருக்கும் சிறப்பு காலணிகளை அணியுங்கள்.
* ஓய்வு கொடுங்கள் உங்கள் கால்களுக்கு.
* விளையாடும் பொழுது தகுந்த முன் பயிற்சி செய்யுங்கள். அதற்கான சிறப்பு காலணிகளை அணியுங்கள்.
கவனம்:
கால் கட்டை விரலில் சிகப்பு, வீக்கம், வலி, மடக்க முடியாமை இருந்தால் யூரிக் ஆசிட் உடலில் அதிகம் இருக்கின்றதா என்ற பரிசோதனை தேவை. இம்மாதிரி கணுக்காலிலும் முட்டியிலும் கூட ஏற்படலாம். சில நாட்கள் முதல் சில வாரங்கள் தொடரலாம். மருத்துவர் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
டினியா கிருமி தாக்குதல்:
மற்றவர்களுக்கு எளிதில் பரவும் இந்த ஃபங்கஸ் தாக்குதல் கால் நகம் மற்றும் கை நகங்களுக்கும் பரவக் கூடியது. விளையாட்டு வீரர்களுக்கு எளிதில் வரும் பாதிப்பு இது. இது ஆபத்தானது இல்லை எனினும் சில சமயங்களில் சிகிச்சை செய்ய கடினமானதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடையோரும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவரை அணுக வேண்டும்.
பாதிப்புடையோரை நேரடியாக தொடுவதி னாலும், சில பூஞ்ஞைகள் இருக்கும் இடங்களில் பாதம் படுவதாலும் பாதிப்பு ஏற்படும். வெது வெதுப்பான, ஈரமுடைய இடங்களில் இக்கிருமி இருக்கும். குளியல் அறை, நீச்சல் குளம் ஆகிய இடங்களில் இந்த ஃபங்கஸ் ஆக்கிரமிப்பு இருக்கும். யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
* பொது இடங்களில் செருப்பின்றி நடப்ப வர்கள் பொது குளியலறைகள், நீச்சல் குளங்கள் பயன்படுத்துபவர்களுக்கும்.
* பாதிப்புடையவரின் ஸாக்ஸ், ஷு, துண்டு பயன்படுத்துபவர்களுக்கும்.
* மிக இறுக்கமான ஷு அணிபவர்களுக்கும்
* அதிக நேரம் தண்ணீரில் இருக்கும் கால்கள், வியர்வை காலுடன் இருப்பவர்களுக்கும்
* சிறு வெட்டு, காயம் புண் போன்றவை பாதத்தில் இருப்பவர்களுக்கும் இக்கிருமி பாதிப்பு ஏற்படும்.
இப்பாதிப்பின் அறிகுறிகள்:
* விரல் இடைவெளிகளில் அரிப்பு, எரிச்சல்
* பாதத்தில் அரிப்பு, எரிச்சல்
* பாதத்தில் கொப்பளங்கள்
* பாதத்தில் வெடிப்பு, தோல் உரிதல்
* வறண்ட பாதம்
* தோல் உரிந்த சருமம்
* நிறம் மாறிய சுருங்கிய கால் நகங்கள்.
* வெளி வந்த பாத நகங்கள். இதன் சிகிச்சைக்கு மேல் பகுதியில் மருந்து தடவுவதும், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதும் இதற்கான சிகிச்சையாகும். அதிக கொப்பளங்களும், சீழ் வைப்பதும், கிருமி தாக்குதல்கள் ஏற்படுவதும் பாதிப்பின் அதிக வீரிய வெளிப்பாடாகும். தொடர் பாதிப்பு இருந்தால் சற்று நீண்ட கால சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.
தவிர்ப்பு முறைகள் :
* காலை சுத்தமாக தரமான சோப் கொண்டு கழுவ வேண்டும்.
* விரல் இடைவெளிகளில் சுத்தமாக கழுவவும்.
* இதற்கென இருக்கும் பிரத் யேக பவுடரை கால்களுக்கு பயன் படுத்தவும்.
* பொது இடங்களில் செருப்பின்றி நடக்க வேண்டாம்.
* தினமும் சாக்ஸ்களை மாற்றவும்
* அதிக வியர்வை காலில் இருந்தால் தினம் இருமுறை சாக்ஸ் மாற்றவும்.
* காற்று புகும் விதத்தில் அமைந்த ஷுக்களை பயன்படுத்தவும்.
* 2 செட் ஷு வைத்து கொண்டு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஷுவை பயன் படுத்தினால் ஷு நன்கு உலர்ந்து இருக்கும்.
பாதத்திற்குபாதகம் விளை விப்பவை:
* அளவு சரியில்லாத காலணி
* ஹை ஹீல்ஸ் காலணி
* பாதத்தில் உணர்வின்மை
* மூட்டு வலி பிரச்சினை
* பாத, கணுக்காலில் அடி, காயம்
* அடிக்கடி கடின பரப்பில் நடப்பது
* நரம்பு பிரச்சினை
* அதிக எடை ஆகும் ஆகவே இத்தகைய பாதிப்புகளை தவிர்த்து விடுவதே சிறந்தது. நம் பாதம் எப்போதும் வறண்டு இருக்கும். காரணம் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே அது தன்னை ஈரப் பதத்துடன் வைத்துக் கொள்ள வியர்வை சுரப்பிகளையே சார்ந்து இருக்கின்றது. பாதத்திற்கு மாஸ்ட் ரைசர் தடவாத நபர்களுக்கு பாதம் மிக வறண்ட சருமமாகவே இருக்கும். இந்த வறட்சி சின்ன பாதிப்பு முதல் கடுமையான பாதிப்பு வரை இருக்கலாம்.
வறண்ட சருமத்தின் அறிகுறிகள்:
* அரிப்பு
* சிகப்பு
* வெடிப்பு
* சொர சொரப்பு
* தோல் உரிதல்
* திட்டு
* குளிர்காலத்தில் அதிக பாதிப்பு ஆகியவை ஆகும்.
வறண்ட சருமத்திற்கு பல காரணங்கள் உள்ளன
* அதிக நேரம், அதிக முறை குளிப்பது.
* எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற பாதிப்புகள்
* மாஸ்ட் ரைஸர் இல்லாத சோப்புகள்
* தைராய்டு, நீரிழிவு பாதிப்புகள்
* குளிர்
* முதுமை
* அதிக நேரம் வெயிலில் இருத்தல் ஆகியவை ஆகும். பாதத்திற்கென தனி மருத்துவர் உள்ளார். சரும மருத்துகள் பெரிதும் உதவும். இந்த வறண்ட பாத சருமத்திற்கு கவனம் செலுத்தாவிட்டால்
* பாத பாதிப்பு
* நடப்பதில் கடினம்
* இந்த பாதிப்பிற்கு அதிகம் பணம் செல வழிக்க வேண்டி வரும்
* மாஸ்ட் ரைஸர் பயன்படுத்துவதும், நன்கு தண்ணீர் குடிப்பதும் அடிப்படை பாதுகாப்பு முறைகளாகும்.