பீதியில் இருக்கும் மேர்வின் சில்வா !

Sarath-Fonseka3
 ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டுள்ளதை அடுத்து, கொழும்பில் உள்ள பாதாள உலகக்குழுக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளதை அடுத்து, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சட்டத்தை தமது கையில் எடுத்து செயற்பட்ட சிலர் திக்குமுக்காடி போயுள்ளனர். 

இவர்களில் முதன்மையானவர் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எனக் கூறப்படுகிறது.  

பொன்சேகா சத்தியப்பிரமாணம் செய்யும் வரை அது நடக்காது என மேர்வின் சில்வா கூறிவந்துள்ளார். 

பொன்சேகா சத்தியப்பிரமாணம் செய்ததை அடுத்து மேர்வின் சில்வா கொழும்பில் உள்ள தனது சகாக்களை வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடியுள்ளார். இவர்களை தவிர சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியுள்ளார். 

கடந்த 5 வருடங்களாக ராஜபக்சவினருக்கான சரத் பொன்சேகாவுக்கு எதிராக செய்த தொந்தரவுகளை மேர்வின் சில்வா இதன் போது தனது சகாக்களுக்கு நினைவூட்டியுள்ளார். 

இவற்றில் முக்கியமானது சரத் பொன்சேகா, வேட்புமனுவை பெற்றபின்னர் களனி விகாரைக்கு சென்ற போது ஏற்படுத்திய இடையூறு மற்றும் கதிர்காமம் சென்ற போது வீதியை மறைத்து ஏற்படுத்திய தடை ஆகியன இவற்றில் பிரதானமாகும். 

இந்த நிலையில், எதிர்காலத்தில் பொன்சேகாவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் களனியில் மேர்வின் சில்வா தனது சகாவான களு ராஜாவை கொண்டு நடத்திய வரும் விஷ்ணு கோயிலை முற்றுகையிடலாம் என்ற காரணத்தில் ஆலயத்தின் கணக்கு வழக்குகளை உடனடியாக சரியான முறையில் செய்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

பொன்சேகாவை பழிவாங்கியவர்கள் தற்போது தெய்வங்களையும் புத்த பகவானையும் நினைப்பது நல்லது எனக் கூறி மேர்வின் மேலும் பீதியை கிளப்ப தயாராகி வருவதாக கூறப்படுகிறது.