தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த காலம் ஒழிக்கப்பட்டுள்ளது : சிப்லி பாரூக் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

இரண்டு சமூகங்களையும் பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த பயங்கரவாத சூழல் மாறி இன்று நல்லதோர் புரிந்துணர்வினூடாக இரு சமூகங்களும் ஒன்றினைந்து புதியதோர் கலாச்சாரத்தினை தோற்று வித்திருக்கின்றார்கள் என்று அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்திய கல்வி வலையத்திற்குட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடை மட்/மம/ அல்-அக்ஷா மகா வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி மற்றும் பிரிண்டர் இயந்திரங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

 

02_Fotor

 

 காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஷா மகா வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் பாடசாலை அதிபர் அப்பாஸ் (நளீமி) அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து சிறப்பித்து பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாட்டுக்காக போட்டோ கொப்பி மற்றும் பிரிண்டர் இயந்திரங்களை உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

 

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், இரண்டு சமூகங்களையும் பிழவுபடுத்தி வேடிக்கை பார்த்த பயங்கரவாத சூழல் மாறி நல்லாட்சி மலர்ந்திருக்கின்ற இத்தருனத்தில் அனைத்து மக்களும் இனபாகுபாடின்றி ஒன்றுபட்டு இந்நாட்டின் சுபீட்சத்திற்கும் ஒற்றுமைக்கும் பாடுபட வேண்டும் மேலும் இன்று நல்லதோர் புரிந்துணர்வினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு சமூகங்களும் ஒன்றினைந்து புதியதோர் கலாச்சாரத்தினை தோற்று வித்திருக்கின்றார்கள். இனபாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டம் எமது மாவட்டம் இங்குள்ள பிள்ளைகள் எமது பிள்ளைகள் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் பாடுபடுகின்றனர், அதன் அடிப்படையில் இப்பாடசாலையில் சகோதர இனத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றமை மிகவும் பாராட்டதக்க விடயமாகும்.

03_Fotor

 

காங்கேயனோடை கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பாரியபங்களிப்பினை மட்/மம/அல்-அக்ஷா வித்தியாலயம் வழங்கிகொண்டிருக்கின்றது. இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி அறிவு வளர்சிக்கும் தேவையான விடயங்களை செய்து கொடுக்க வேண்டியது இப்பிரதேசங்களில் உள்ள தனவந்தர்கள் மற்றும் அரசியல் தலைமைகளின் கடமையாகும், அதன் அடிப்படையில் கடந்த வருடம் அதிபர் அவர்கள் பாடசாலையின் நிலைமைகளை என்னிடம் எடுத்துரைத்து போட்டோ கொப்பி இயந்திரம் முக்கிய தேவையாக இருக்கின்றது அதனை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார் அவரின் வேண்டுகோளினை நிவர்த்தி செய்யும் முகமாக கடந்த வருட மாகாணசபையின் எனது பண்முகப்பபடுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 120,000.00 பெருமதியான போட்டோ கொப்பி மற்றும் பிரிண்டர் இயந்திரங்களை இன்று கையளித்துள்ளோம். 

 

இலங்கை அரசாங்கம் பாடசாலையினை வளப்படுத்துவதும், இலவச கல்வியினை வழங்குவதன் நோக்கம் மாணவர்களாகிய நீங்கள் சிறந்த முறையில் கல்வியினை கற்று சிறந்த கல்விமான்களாக வளர்ச்சியடைந்து இலங்கை திருநாட்டிற்கு நற்பிரஜைகளாகவும், பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும், பெற்றோர்களுக்கும் மதிப்பையும் பெருமையையும் பெற்றுகொடுக்க வேண்டும் என்பதற்காகவே, எனவே நீங்கள் அதற்கான முழு முயற்சியினையும் மேற்கொள்ளவேண்டும். மேலும் 600 பாடசாலைகளை அபிவிருத்தி செய்கின்ற திட்டத்தில் இப்பாடசாலையினையும் உள்வாங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றோம் எனவே மாணவர்களில் கல்வி பெறுபேற்று வீத வளர்ச்சியானது அதிகரிக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் ஏதாவது ஒருசில குறைபாடுகள் காணப்படுகின்றன அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் எமது கிழக்கு மாகாணசபை ஈடுபட்டு கொண்டிருக்கின்றது.

 

கவர் போட்டோ_Fotor

 

படுவான்கரை பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலைகளை விட எமது கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் பாடசாலைகள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது படுவான்கரை பிரதேச பாடசாலைகளை பார்க்கும் போது வளப்பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மாணவர்கள் பலவிதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்கள் கல்வியினை இடைவிடாமல் கற்று இன்று மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளாக அரச நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கின்றனர். எனவே இங்குள்ள மாணவர்கள் பல்வேறு தியாகங்களை செய்தும், ஏற்படுகின்ற சிரமங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டும் சிறந்த முறையில் கல்வினை கற்கவேண்டும். ஆசிரியர்களையும் மற்றும் சக மாணவர்களையும் மதித்து செயலாற்ற வேண்டும் அதனூடாக அனைவருக்கும் கௌரவத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும், அதே போல் இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கி நாட்டின் சுபீட்சத்திற்கும், ஒற்றுமைக்கும் பாடுபடுகின்ற நல்லதோர் வளமிக்க சமுதாயத்தினை உருவாகுவதனூடாக அனைத்து துறைகளிலும் தலைசிறந்த கல்விமான்களாக இம் மாணவர்கள் திகழ்ந்து உங்களுக்கும், இப் பிரதேசத்திற்கும் பாடசாலைக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

 

மேலும் இப்பாடசாலையின் அதிபர் இரண்டு விடயங்களை முன்வைத்திருக்கின்றார் அதில் ஒன்று கஷ்ட பிரதேசங்களில் கல்விகற்பிப்பதற்கான கொடுப்பனவு இப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றார் அதற்கான தீர்வை நாங்கள் விரைவில் பெற்றுத்தருகின்றோம், இரண்டாவது பாடசாலையில் தளபாட பற்றாக்குறையயை நிவர்த்தி செய்து தரவேண்டும் என்று, இவ்வாறான தளபாட பற்றாக்குறை மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் பொதுவான ஓர் பாரிய பிரச்சினை அதனை தீர்பதற்காக மாகாணசபையில் பிரேரணையொன்றை முன்மொழிந்து அதனூடாக தீர்வினை பெற்றுத்தருவோம். மேலும் இங்குள்ள உடைந்த தளபாடங்களை சீர்செய்வதற்காக எனது சொந்த நிதியிலிருந்து ரூபா 20,000.00வினை வழங்குகின்றேன். அத்துடன் இப்பாடசாலையில் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை எதிர்காலத்தில் செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வோம் என தனதுரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.