எமில்காந்தன் வருகை, புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்திருந்தால் சிறை!

emil mahinda_CI

 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்சவை நெருக்கடிக்குள் சிக்கவைக்கவே எமில்காந்தன் அழைக்கப்படவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகை பணத்தை மகிந்த ராஜபக்ச வழங்கியது தொடர்பில் எமில்காந்தன் தகவல்களை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவின் கைதை தொடர்ந்து மகிந்த ராஜபக்சவை சிக்க வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்காக எமில்காந்தன் இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச எமில்காந்தன் ஊடாக புலிகளுக்கு பணம் வழங்கியதாகவும் இதில் டிரான் அலசும் தொடர்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து தேர்தல் ஊழல் ஒன்றை செய்து ஆட்சியை கைப்பற்றியமை கண்டுபிடிக்கப்பட்டால் இலங்கை அரசியல் வரலாற்றில் மாபெரும் ஊழலாக கருதப்படும் என்றும் அதனை களைந்தெறிய உரிய நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும்  அந்த ஊடகம் கூறுகிறது. 

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தேர்தல் ஜனநாயக விதிமுறைகளை மீறிய குற்றத்தில் அவர் சிறைக்குள் தள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

எமில்காந்தன் சரணடைவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து அவருக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கை நீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் இலங்கை வந்து சரணடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.