ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள் அவர்கள் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவர்கள் என உளவியல் வைத்திய நிபுனரும் பிரபல பேச்சாளருமான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி தெரவித்தார்.
காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டடில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் ‘யார் இந்த ஷீயாக்கள்’ எனும் தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
ஷீயாக்கள் என்போர் புனித இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் பல்வேறுபட்ட மோசமான கருத்துக்களைக் கொண்டோர்.
குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான ‘ஷஹாதா’ எனப்படும் கலிமாவில் கூட திரிபுகளை ஏற்படுத்தல்இதொழுகையில் ஈடுபடும் போது கிப்லாவை(புனித கஃபாவை முன்னோக்கித் தொழல் வேண்டும் என்ற ஷரீஆ கட்டளைக்கு மாறாக) முன்னோக்காதிருத்தல் , ‘கர்பலா’ யுத்த தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில் இஸ்லாம் அனுமதிக்காத வெட்டுக்குத்து,தம் உடம்பில் தாமாகவே காயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடல் ,அல் குர்ஆன் போற்றிப் புகழ்ந்த அதிகமான ஸஹாபாக்களை நரகவாதிகள் என பிரகடனப்படுத்தல் ,நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அதி விருப்பத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரழி) யை விபச்சாரி என பொய்பட்டம் சூட்டல்இ தற்போது முஸ்லிம்களிடம் உள்ள அல் குர்ஆன் முழுமையானதல்ல என அப்பட்டமான பொய் உரைத்தல் ,குறிப்பிட்ட இரவில் யார் வேண்டுமானாலும் எந்தப் பெண்னுடனும் தவறாக ஈடுபடலாம் என பத்வா கொடுத்தல் உள்ளிட்ட இஸ்லாத்திற்கும் அதன் அடிப்படைக் கோட்பாட்டையும் முழுமையாக பாதிக்கக் கூடிய பல விஷமத் தனமான கருத்துக்களை போதிக்கக் கூடிய ஒரு இயக்கமே இந்த ஷீயா இயக்கமாகும்.
உலகலாவிய ரீதியில் ஈரான்இ ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படும் குறித்த இயக்கம் இலங்கை நாட்டிலும் அண்மைக்காலமாக பரவலாக பரவி வருகின்றது.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் மன்பஉல் ஹுதா எனும் பெயரில் அவர்களுக்கென ஓர் மதரசா(கூடம்) நடாத்தப்பட்டு அதில் வருடாவருடம் மாணவர்களை வெளியாக்குவதன் மூலம் குறித்த நச்சுக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்லாது பொலன்னறுவைப் பிரதேசத்திலும் பெண்களுக்கென ஓர் மதரசா இயங்குவதோடு நாடளாவிய ரீதியில் அவர்களுடைய நச்சுக்கருத்துக்கள் பொதிந்த நூல்கள்,துண்டுப்பிரசுரங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே ஷீயாக்கள் குறித்தும் அவர்களது நச்சுக்கருத்துக்கள் குறித்தும் முஸ்லிம்களாகிய நாங்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.குறிப்பாக அவர்களது நூல்களை முற்றாக புறக்கணித்து நடப்பதுடன் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தெளிவுகளை தகுந்த உலமாக்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
குறித்த இஸ்லாமிய மாநாட்டில் பெரும்பாலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.