நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய சுதந்திர தினத்தை முன்ணிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களை சந்தித்துள்ளனர்.
எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி, பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்வது என இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக நான் ஊடகங்களிடம் கூறினேன்.
சுதந்திர தினத்திற்கு முன்னதாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்ற எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை கைது செய்யப்படும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகளின் முகவர்கள் இருப்பது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை.
எனது மகன் யோஷித்த ராஜபக்ச, எனது ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க, சீஎஸ்.என் தொலைக்காட்சியின் இரண்டு பணிப்பாளர்களான ரவிநாத் பெர்ணான்டோ, கவிஷான் திஸாநாயக்க ஆகியோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு சக்தியிடம் இருந்து சுதந்திரம் பெற்று 68வது ஆண்டு கொண்டாடப்படும் நேரத்தில் என்னையும் எனது குடும்பத்தினரையும் சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர் என்பதை இலங்கை மக்களிடம் கூறிக்கொள்கின்றேன்.
இதன் காரணமாக தேசிய இறையாண்மை, பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவும் எனது தேசிய ஆத்ம கௌரவத்தை மீண்டும் ஸ்தாபித்து, தாய் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வழியில் இருந்து விலக மாட்டேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு வெற்றிக்கொள்ளப்பட்ட யுத்தம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, சில சூழ்ச்சிக்கரமான வெளிநாட்டு சக்திகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்த ஓய்வுக்கும் சிறிய ஆயுட்காலம் உள்ளது.
2015 ஆம் ஜனவரி 8 ஆம் திகதி காரணமாக வெளிநாட்டு சக்திகள் அவர்களின் நடவடிக்கைகளுக்காக எமது நாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
பயங்கரவாதம் மூலம் சுமார் நான்கு தசாப்தங்களாக தமது நோக்த்தை நிறைவேற்றி கொள்ள முடியாத பிரிவினைவாதிகள், தற்போது வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் தமது இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த வருடம் தமது புதிய ஆக்கிரமிப்பை தொடங்கிய வெளிநாடுகளை சேர்ந்த நபர்களின் நடவடிக்கைகள் முடியாத தொடராக உள்ளது.
வெளிநாட்டு பலமிக்க சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக ஆபத்தான விடுதலைப் புலி கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போர் குற்றம் தொடர்பாக எமது இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளனர் என மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.