தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க இடமளிக்கப் போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என இன்று முற்பகல் அகுணுகொலபெலஸ்ஸயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார்.
லைலா ,சுருக்கு வலை மற்றும் கதன் கோஸ் ஆகிய சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களின் பாவனை கடந்த மாதம் 21 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டது.
சிலர் குறித்த தீர்மானத்தினை அரசியல்மயப்படுத்த முயல்வதுடன் அரசியல்வாதிகள் மீனவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி அவர்களை வழிதவறச் செய்ய முற்படுவதாக ஊடக சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.