குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை!

sarath-fonseka
சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், படைவீரர்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குணவர்தன கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார்.

குணவர்தனவின் மறைவினால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமும், தேசிய அரசாங்க அமைச்சரவை அமைச்சுப் பதவியொன்றும் வெற்றிடமாகியுள்ளது.

இந்தப் பதவி வெற்றிடங்களை நிரப்புவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரமளவில் பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.