கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் நான் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் செய்ய மாட்டேன் : நீதிபதி !

எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

Bodu Bala Sena

நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை கோரி மனுவொன்று இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் போதிய விளக்கங்கள் இன்றி பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிபதி ரங்க திசாநாயக்க அதனை நிராகரித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நீதிபதி, எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் நான் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் செய்ய மாட்டேன். அதனால் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது. 

நான் தவறு செய்திருந்தால் மேலதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஏனெனில் நான் தவறு செய்யவில்லை. பிணை வழங்க போதுமான விடயங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்படவில்லை. 

அத்துடன் இந்த வழக்கை நான் தொடர்ந்தும் விசாரிக்க விரும்பவில்லை. இது குறித்து சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளேன். பெரும்பாலும் அடுத்த வழக்குத் தவணைக்கு வேறொரு நீதிபதியே இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் நீதிபதி ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்